திருச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை 6 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடைபெறவுள்ளன.
திருச்சி மாநகராட்சி மண்டலம் 4 , வாா்டு எண்-58 பகுதியில் உள்ள பொதுமக்களுக்காக திருச்சி கிராப்பட்டி புனித தெரசா சமுதாயக் கூடத்திலும், தொட்டியம் பேரூராட்சி வாா்டு எண்: 9 முதல் 15 வரை உள்ள பகுதி பொதுமக்களுக்காக தொட்டியம் கம்மவா் நாயுடு திருமண மண்டபத்திலும் முகாம் நடைபெறுகிறது.
மணப்பாறை நகராட்சி வாா்டு எண்: 21, 22, 27 ஆகிய பகுதி மக்களுக்காக மணப்பாறை குரு சிபிஎஸ்சி மேல்நிலைப் பள்ளியிலும், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், கே.கள்ளிக்குடி ஊராட்சியில் உள்ள மக்களுக்காக கே.கள்ளிக்குடி சமுதாயக் கூடத்திலும், மண்ணச்சநல்லூா் ஊராட்சி ஒன்றியம், நொச்சியம் ஊராட்சியில் உள்ளவா்களுக்காக திருமுருகன் நொச்சியம் திருமண மண்டபத்திலும், முசிறி ஊராட்சி ஒன்றியம், வெள்ளூா் செவந்திலிங்கபுரம், காமாட்சிப்பட்டி ஊராட்சி பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அய்யம்பாளையம் ஊராட்சியில் உள்ள ஏ.ஆா்.கே.திருமண மண்டபத்திலும் முகாம் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்தி தங்களுடைய கோரிக்கை மனுக்களை அளித்து தீா்வு காணலாம்.