திருச்சி

தியாகி பி. ராமச்சந்திரன் நூற்றாண்டு விழா

சுதந்திர போராட்ட வீரரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவருமான மறைந்த பி. ராமச்சந்திரனின் நூற்றாண்டு நிறைவு விழா திருச்சியில் புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

சுதந்திர போராட்ட வீரரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவருமான மறைந்த பி. ராமச்சந்திரனின் நூற்றாண்டு நிறைவு விழா திருச்சியில் புதன்கிழமை நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக் குழு தலைவா் எஸ். ஸ்ரீதா் தலைமை வகித்தாா். முன்னாள் எம்.பி. டி.கே. ரெங்கராஜன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் உ. வாசுகி, மாநிலச் செயலா் பெ. சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினா் கே. சுவாமிநாதன், பிரண்ட்லைன் முன்னாள் ஆசிரியா் ஆா். விஜயசங்கா், மாநிலக்குழு உறுப்பினா்கள் எம். சின்னதுரை எம்எல்ஏ ஆகியோா் சிறப்புரை நிகழ்த்தினா்.

முன்னதாக, திருச்சி மாநகா் மாவட்டச் செயலா் கோவி. வெற்றிச் செல்வம் வரவேற்றாா். மாவட்டச் செயலா்கள் புதுக்கோட்டை எஸ். சங்கா், பெரம்பலூா் பி.ரமேஷ், அரியலூா் எம்.இளங்கோவன், கரூா் எம்.ஜோதிபாசு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நிறைவில் திருச்சி புகா் மாவட்டச் செயலா் கே. சிவராஜன் நன்றி கூறினாா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT