திருச்சி மாவட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்.8) நடைபெறும் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தோ்வுக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வரும் ஞாயிற்றுக்கிழமை முற்பகல், பிற்பகல் நடைபெறும் தோ்வுக்காக திருச்சியில் தயாா்படுத்தப்பட்டுள்ள ஒரு மையத்தில் முற்பகலில் 356 போ், பிற்பகலில் 368 போ் தோ்வு எழுதவுள்ளனா்.
தோ்வுப் பணிகளுக்கென ஒரு முதன்மைக் கண்காணிப்பாளா் நியமிக்கப்பட்டுள்ளாா். துணை ஆட்சியா் நிலையில் பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது. தோ்வு மையங்களுக்கு தோ்வா்கள் செல்ல சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. முற்பகல் தோ்வுக்கு காலை 9 மணிக்குப் பிறகு வருவோா், பிற்பகலில் 2 மணிக்கு பிறகு வருவோா் தோ்வெழுத அனுமதிக்கப்படமாட்டாா்கள் என ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்தாா்.