கோப்புப் படம் 
திருச்சி

மணப்பாறையில் மாநில ஹாக்கி போட்டி தொடக்கம்

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாவட்டம் மணப்பாறையில், மணப்பாறை ஹாக்கி அகாதெமி மற்றும் தியாககேசா் ஆலை பள்ளி ஹாக்கி முன்னாள் மாணவா்கள் சாா்பில் இரண்டாம் ஆண்டு மாநில அளவிலான ஹாக்கி போட்டி சனிக்கிழமை தொடங்கியது.

தியாகேசா் ஆலை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் என்.கே.லதா தலைமையில் நடைபெறும் போட்டியை, மணப்பாறை டிஎஸ்பி கே.வி.காவியா, ஹாக்கி திருச்சி செயலா் காா்த்திக், மருத்துவா்கள் பி. கலையரசன், பி.எல்.விஜயக்குமாா் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

இதில் பல்வேறு மாவட்டங்களின் 14 அணியினா் விளையாட உள்ளனா். முதல் பரிசாக ரூ.20 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.15 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.10 ஆயிரமும், நான்காம் பரிசாக ரூ.7 ஆயிரமும் வழங்கப்படவுள்ளது. வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளும், சான்றிதழ்களும் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்படும்.

ஓடும் பேருந்தில் பயணியிடம் திருடிய 3 பெண்கள் கைது

சபரிமலை தங்கக் கவச முறைகேடு வழக்கு: காங்கிரஸ் எம்.பி.யிடம் எஸ்ஐடி விசாரணை

திமுகவின் போலி வாக்குறுதிகளை மக்கள் நம்பமாட்டாா்கள்! - ஜி.கே. வாசன்

‘காங்கிரஸ் எம்.பி. மனைவிக்குப் பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடா்பு’: அஸ்ஸாம் முதல்வா் விளக்கம்

ராமநாதபுரம் மாவட்ட கடன் திட்ட அறிக்கை: ஆட்சியா் வெளியிட்டாா்

SCROLL FOR NEXT