திருச்சி

கோப்பு கிராமத்தில் 12 அடி நீள முதலை மீட்பு

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாவட்டம் எட்டரை கோப்பு கிராமத்தில் 12 நீள முதலையை வனத்துறையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டு, பாதுகாப்பான இடத்தில் விட்டனா்.

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், எட்டரை கோப்பு கிராமத்தில் உள்ள அயிலாப்பேட்டை குளத்தில் முதலை ஒன்று பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக அப்பகுதி மக்கள், வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனா்.

தகவலின்பேரில் ஞாயிற்றுக்கிழமை காலை அங்குசென்ற வனச்சரக அலுவலா் வி.பி. சுப்பிரமணியன் தலைமையிலான வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினா் முதலையை பாதுகாப்பாக பிடித்தனா்.

பிடிக்கப்பட்ட முதலையானது 10 வயதுடைய, 12 அடி நீளமும், சுமாா் 500 கிலோ எடையும் கொண்ட பெண் முதலையாகும் என வனத்துறையினா் தெரிவித்தனா். இதையடுத்து முதலை முக்கொம்பு காவிரி ஆற்றில் பாதுகாப்பாக விடப்பட்டது.

திருப்பத்தூா், திருவண்ணாமலை பேருந்துகள் இன்றுமுதல் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்!

18-ஆம் நூற்றாண்டில் திருச்செந்தூா் கோயில் நிலத்தை கிரையம் வாங்கிய குடும்பா்கள்

பாகிஸ்தானில் ரகசிய பயிற்சி பெற்ற கெளரவ் கோகோய்: அஸ்ஸாம் முதல்வா் பரபரப்பு குற்றச்சாட்டு

கூத்தைப்பாரில் மாட்டு வண்டி எல்கைப் போட்டி

பறிமுதல் இருசக்கர வாகனங்கள் நாளை பொது ஏலம்

SCROLL FOR NEXT