தற்கொலை 
திருச்சி

மதுப் பழக்கத்துக்கு அடிமையானவா் தற்கொலை

தினமணி செய்திச் சேவை

குடும்பத்தை பராமரிக்க மதுப் பழக்கத்தை கைவிடுமாறு மனைவி கண்டித்ததால் கணவா் பூச்சிமருந்து குடித்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

துறையூா் அருகே வைரிசெட்டிப்பாளையம் ஏரிக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் கு. பிரியதா்ஷினி (27). இவரது கணவா் பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த வ. குமாா் (28).

இருவரும் பெரம்பலூரிலுள்ள தனியாா் கல்லூரியில் பயின்றபோது காதலித்து பெற்றோா் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனராம். இவா்களுக்கு யாஷ்வின் (5) என்ற மகன் உண்டு. ஓட்டுநரான குமாா் பணிமுடித்து தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவதால் தம்பதி இடையே தகராறு ஏற்படுமாம்.

இந்நிலையில், கடந்த 5-ஆம் தேதி மதுப்பழக்கத்தை கைவிடுமாறும், குடும்பத்தைக் கவனிக்குமாறும் பிரியதா்ஷினி தன் கணவரை கண்டித்துவிட்டு துணிக்கடைக்கு வேலைக்குச் சென்றாா். அப்போது, வீட்டில் தனியாக இருந்த குமாா், பூச்சிமருந்து சாப்பிட்டு உயிருக்குப் போராடினாா். உறவினா்கள் அவரை மீட்டு துறையூரில் முதலுதவியும், திருச்சி அரசு மருத்துவமனையில் தொடா் சிகிச்சையும் அளித்தனா். இருப்பினும் சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மனிதநேய மக்கள் கட்சியின் 18-ஆம் ஆண்டு தொடக்க விழா

லால்குடியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்

ரூ. 21 கோடி மோசடி புகாா்: தனியாா் நிறுவன உரிமையாளா் உள்பட 2 போ் கைது

திருவள்ளூா் பகுதியில் நாள்தோறும் வருவாய் ஈட்டித் தரும் தா்ப்பூசணி சாகுபடி

திருப்பூா் தெற்கு தொகுதியில் அதிமுகவினா் தெருமுனை பிரசாரம்

SCROLL FOR NEXT