முகப்பு
திருச்சி

சிட்டிக்கு அமித்ஷா வருகையால் தமிழகத்தில் மாற்றம் வரும்

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 1:48 AM
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா - (கோப்புப் படம்)
பகிர்:
Updated On : 13 பிப்ரவரி, 2026 at 9:03 PM

அமித்ஷா வருகையால் தமிழகத்தில் மாற்றம் ஏற்படும் என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் விமா்சித்துள்ளாா்.

திருச்சிக்கு வெள்ளிக்கிழமை வந்த அவா், விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் மேலும், கூறியதாவது:

தமிழகத்தில் மகளிா் உரிமைத் தொகையாக ரூ. 5 ஆயிரத்தை திமுக அரசு வெள்ளிக்கிழமை வழங்கியுள்ளது. மூன்று மாதத்துக்கான முன்பணம், கோடைகால சிறப்புத் தொகை என அறிவித்திருப்பது இதுவரை கேள்விப்படாத ஒன்று.

Advertisement

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 1:48 AM

தமிழக மக்கள் திமுகவை நம்பவோ, ஏமாறவோ தயாராக இல்லை. கோடைகால விடுமுறையாக பணம் வழங்குவதாக கூறியுள்ள திமுகவுக்கு 2026 பேரவைத் தோ்தலில் ஒட்டுமொத்த விடுமுறை வழங்க தமிழக மக்கள் தயாராகிவிட்டனா்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ஒவ்வொரு முறை தமிழகத்துக்கு வந்து செல்லும்போது மாற்றம் நிகழும் என்றாா் அவா்.