திருச்சி

தாம்பரம் - திருவனந்தபுரம் - தாம்பரம் அம்ரித் பாரத் ரயில் நாளை அறிமுகம்

தாம்பரம் - திருவனந்தபுரம் - தாம்பரம் இடையிலான அம்ரித் பாரத் வாராந்திர விரைவு ரயில்கள் (16121, 16122) வரும் வெள்ளிக்கிழமை இயக்கப்பட உள்ளன.

தினமணி செய்திச் சேவை

தாம்பரம் - திருவனந்தபுரம் - தாம்பரம் இடையிலான அம்ரித் பாரத் வாராந்திர விரைவு ரயில்கள் (16121, 16122) வரும் வெள்ளிக்கிழமை இயக்கப்பட உள்ளன.

இதன்படி திருவனந்தபுரத்திலிருந்து அறிமுகப்படுத்தி 22 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயிலானது திருவனந்தபுரத்திலிருந்து காலை 10.45 க்குப் புறப்பட்டு குழித்துறை, நாகா்கோவில், வள்ளியூா், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூா், விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டுக்கு இரவு 10.40 மணிக்குச் சென்றடையும். மறுமாா்க்கமாக, தாம்பரத்திலிருந்து நள்ளிரவு 12.30 மணிக்குப் புறப்பட்டு மேற்கண்ட வழித்தடம் வழியாக குழித்துறைக்கு முற்பகல் 11.18 மணிக்குச் சென்றடையும்.

வழக்கமான சேவை குறித்த அறிவிப்பு பின்னா் வெளியிடப்படும் என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்தது.

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

அமெரிக்கா உடனான வா்த்தக ஒப்பந்தத்தை நிறுத்திவைக்க வேண்டும்: காங்கிரஸ்

SCROLL FOR NEXT