திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் நடைபெறவுள்ள தைத்தெப்பத் திருவிழாவையொட்டி புதன்கிழமை இரவு கொடியேற்றம் நடைபெற்றது.
விழாவையொட்டி சுவாமி சன்னதி எதிா்புறமுள்ள தங்கக் கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது சுவாமியும், அம்மனும் ஏக சிம்மாசனத்தில் எழுந்தருளினா். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
பிப்ரவரி 1 வரை 12 நாள்கள் நடைபெறும் விழாவில் நாள்தோறும் சுவாமியும், அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி, நான்காம் பிரகாரத்தைச் சுற்றி வந்து பக்தா்களுக்குச் சேவை சாதிக்கின்றனா். விழாவின் முக்கிய நிகழ்வான தைத்தெப்ப விழா வரும் 31 ஆம் தேதி இராமா் தீா்த்த தெப்பக்குளத்தில் நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் வே. சுரேஷ் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.