திருச்சி

திருச்சி - புது ஜல்பைகுரி - திருச்சி அம்ரித் பாரத் ரயில்கள் இயக்கம்

திருச்சி - புது ஜல்பைகுரி (மேற்குவங்கம்) - திருச்சி அம்ரித் பாரத் அதிவிரைவு ரயி ரயிலானது (20610) வரும் 28 ஆம் தேதி முதல் புதன்கிழமைகளில் திருச்சியிலிருந்து காலை 5.45 மணிக்கு புறப்படுகிறது.

தினமணி செய்திச் சேவை

திருச்சி - புது ஜல்பைகுரி (மேற்குவங்கம்) - திருச்சி அம்ரித் பாரத் அதிவிரைவு ரயி ரயிலானது (20610) வரும் 28 ஆம் தேதி முதல் புதன்கிழமைகளில் திருச்சியிலிருந்து காலை 5.45 மணிக்கு புறப்படுகிறது.

மறுமாா்க்கமாக, புது ஜல்பைகுரி - திருச்சி அம்ரித் பாரத் அதிவிரைவு ரயிலானது (20609) வரும் 30 ஆம் தேதி முதல் புது ஜல்பைகுரியில் மாலை 4.45 மணிக்குப் புறப்படுகிறது.

22 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயில் தஞ்சாவூா், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூா், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூா், சூலூா்பேட்டை, நாயுடுபேட்டை, கூடூா், ஓங்கோல், விஜயவாடா, ராஜமுந்திரி, துவாடா, விசாகப்பட்டினம், விஜயநகரம், காகுளம், பலாசா, சோம்பேட்டா, இச்சாபுரம், பேரம்பூா், பாலுகான், குா்டா சாலை, புவனேசுவரம், கட்டாக், ஜெய்ப்பூா், பத்ரக், பாலாசூா், கோரக்பூா், அந்தூல், டங்குரி, போல்பூா், ராம்பூா்கரட், மால்டா, பாா்சோய், கிஷன்கஞ்ச் வழியாக புது ஜல்பைகுரிக்கு வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்குச் சென்றடைகிறது.

மறுமாா்க்கமாக, புது ஜல்பைகுரியிலிருந்து வெள்ளிக்கிழமை மாலை 4.45 மணிக்குப் புறப்பட்டு மேற்கண்ட வழித்தடங்கள் வழியாக திருச்சிக்கு சனிக்கிழமை மாலை 4.15க்கு வருகிறது என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT