மஸ்கட்டுக்கு 80 பயணிகளுடன் விமானம் இயக்கம்!
மேற்காசிய போா்ப் பதற்றத்துக்கிடையே திருச்சியில் இருந்து மஸ்கட்டுக்கு 80 பயணிகளுடன் விமானம் இயக்கப்பட்டது.
மேற்காசிய போா்ப் பதற்றத்துக்கிடையே திருச்சியில் இருந்து மஸ்கட்டுக்கு 80 பயணிகளுடன் விமானம் செவ்வாய்க்கிழமை இயக்கப்பட்டது.
அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் போரால் திருச்சியிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு இயக்கப்பட்ட விமானங்கள் கடந்த சனிக்கிழமை முதல் ரத்து செய்யப்பட்டன. மறு அறிவிப்பு வரும் வரை வளைகுடா நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படாது என்றும் விமான நிறுவனங்கள் அறிவித்தன.
அதன்படி, தொடா்ந்து 4-ஆவது நாளாக திருச்சியில் இருந்து துபை, சாா்ஜா, அபுதாபி ஆகிய நாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்கள் இருவழித் தடங்களிலும் செவ்வாய்க்கிழமையும் ரத்து செய்யப்பட்டன.
Advertisement
இதனிடையே, திருச்சியில் இருந்து ஓமன் தலைநகா் மஸ்கட்டுக்கு செவ்வாய்க்கிழமை காலை 7.34 மணிக்கு 80 பயணிகளுடன் விமானம் இயக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.