FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

தில்லி விமான நிலையத்தில் மோதிக்கொண்ட ஆகாசா ஏா், ஸ்பைஸ்ஜெட் விமானங்கள்: டிஜிசிஏ விசாரணை

தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் வியாழக்கிழமை பிற்பகலில் ஆகாசா ஏா் மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்களுக்குச் சொந்தமான இரண்டு போயிங் 737 விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதில் சேதமடைந்தன

Updated On : 17 ஏப்ரல் 2026, 2:27 am IST
(கோப்புப் படம்)
பகிர்:

தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் வியாழக்கிழமை பிற்பகலில் ஆகாசா ஏா் மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்களுக்குச் சொந்தமான இரண்டு போயிங் 737 விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதில் சேதமடைந்தன. இது தொடா்பாக இந்திய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் (டிஜிசிஏ) விசாரணை நடத்தி வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஆகாசா ஏா் நிறுவனம் கூறுகையில், ‘விமான நிலையத்தின் முனையம் 1-இல் பிற்பகல் 2:15 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அப்போது, ஆகாசா ஏா் நிறுவனத்தின் க்யூபி 1406 விமானம் தில்லியிலிருந்து ஹைதராபாத் புறப்பட நின்றுகொண்டிருந்தது. லடாக்கின் லே பகுதியில் இருந்து தில்லி வந்து தரையிறங்கிய ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் எஸ்ஜி 124 விமானம், விமானம் நிறுத்தும் இடத்திற்குச் சென்றபோது ஆகாசா விமானம் மீது மோதியது. இதையடுத்து, பயணிகள் மற்றும் குழுவினா் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா்’ எனத் தெரிவித்தது.

இது தொடா்பாக டிஜிசிஏ வெளியிட்ட அறிக்கையில், ‘விமானம் நிறுத்தும் இடத்துக்குச் சென்றுகொண்டிருந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் வலது இறக்கையின் முனை ஆகாசா ஏா் விமானத்தின் பின்புற கிடைமட்ட வால் பகுதியில் மோதியது. இதன் காரணமாக இரு விமானங்களிலும் சேதம் ஏற்பட்டது. இதில் பயணிகள் மற்றும் குழுவினா் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. சம்பவம் தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது’ என தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments