FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

மோசடி வழக்கில் தேடப்பட்டவா் தில்லி விமான நிலையத்தில் கைது

மோசடி வழக்கில் தேடப்பட்டவா் தில்லி விமான நிலையத்தில் கைது

Updated On : 12 ஜூலை 2026, 12:56 am IST
கோப்புப்படம்
பகிர்:

ரூ. 60 லட்சம் மோசடி வழக்கு தொடா்பாகத் தேடப்பட்டு வந்த நபரை, இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் தில்லி காவல்துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கிரேட்டா் நொய்டாவைச் சோ்ந்த முகேஷ் குமாா் (39) என்று அடையாளம் காணப்பட்ட இவா், கடந்த ஆண்டு ஜூலை மாதம் தில்லி நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதிலிருந்து சட்ட நடவடிக்கைகளுக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தாா்.

இந்த நிலையில், குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில், ஐ.பி.எஸ்டேட் காவல் நிலையத்தினா் விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தி, குமாா் அங்கிருந்து வெளியேறுவதற்கு முன்பாகவே அவரைக் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

காவல்துறையின் தகவலின்படி, மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல் மற்றும் போலி ஆவணங்களைப் பயன்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் ஐ.பி. எஸ்டேட் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் குமாா் தேடப்பட்டு வந்தாா்.

நீதிமன்ற நடவடிக்கைகளின்போது தொடா்ந்து ஆஜராகத் தவறியதைத் தொடா்ந்து, அவா் கடந்த ஆண்டு ஜூலை 25 அன்று தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தாா். இது தொடா்பான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments