மின்கம்பங்கள் அகற்றாததால் ஆற்றோர சாலைப் பணி "முடக்கம்'
குடியாத்தம், டிச. 5: குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் அருகே, கௌன்டன்யா ஆற்றோரம் ஒரு வழிப் பாதைக்காக ரூ.43 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி, அங்குள்ள மின்கம்பங்கள் அகற்றப்படாததால் ஒன்றரை மாதமாக மு
Updated On : 27 டிசம்பர், 2023 at 11:56 PM
குடியாத்தம், டிச. 5: குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் அருகே, கௌன்டன்யா ஆற்றோரம் ஒரு வழிப் பாதைக்காக ரூ.43 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி, அங்குள்ள மின்கம்பங்கள் அகற்றப்படாததால் ஒன்றரை மாதமாக முடங்கியுள்ளது.
குடியாத்தம் பஸ் நிலையத்திலிருந்து மாதனூர், ஆம்பூர், திருப்பத்தூர், பேர்ணாம்பட்டு, சேம்பள்ளி மற்றும் கர்நாடக மாநிலத்துக்குச் செல்லும் வாகனங்கள் சந்தப்பேட்டை பஜார் வழியாக சென்று வந்தன. பஜார் சாலை குறுகிய அளவில் உள்ளதால், அச்சாலையில் அடிக்கடி போக்குவரத்து தடைபட்டது.