முகப்பு
வேலூர்

பயன்பாடின்றி சாயநீர் சுத்திகரிப்பு கட்டடம்

ஆரணி, நவ. 19: ஆரணி அருகே முள்ளிப்பட்டு சாலையில் ரூ.5 லட்சத்தில் கட்டப்பட்ட பட்டு கூட்டுறவு சங்கங்களின் சாயநீர் சுத்திகரிப்பு அமைப்புக் கட்டடம் பயன்படுத்தப்படாமல் பாழாகி வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

Updated On : 20 செப்டம்பர், 2012 at 9:01 PM
பகிர்:
Updated On : 27 டிசம்பர், 2023 at 11:45 PM

ஆரணி, நவ. 19: ஆரணி அருகே முள்ளிப்பட்டு சாலையில் ரூ.5 லட்சத்தில் கட்டப்பட்ட பட்டு கூட்டுறவு சங்கங்களின் சாயநீர் சுத்திகரிப்பு அமைப்புக் கட்டடம் பயன்படுத்தப்படாமல் பாழாகி வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

 இதனால் கூட்டுறவு சங்கங்களில் வெளியேறும் சாயக் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாகவும் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

 ஆரணியில் 2002-2003ஆம் ஆண்டில் ராஷ்ட்ரீய சாம் விகாஸ் போஜனா திட்டத்தின்கீழ் இக்கட்டடம் கட்டப்பட்டது. இதில், ஆரணி பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், அன்னை அஞ்சுகம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், களம்பூர் ராமர் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், கொருக்காத்தூர் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் ஆகியன இதன்மூலம் பயன்பெறும் என அறிவிக்கப்பட்டது.

Advertisement

 இக்கூட்டுறவு சங்கங்களின் பட்டு நூல்களை சாயம் போட்டு எடுத்துச் செல்வதற்கு வசதியும் செய்து தரப்பட்டது. இதன் பராமரிப்புப் பணிகளை ஆரணி பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

 இந்நிலையில், இக்கட்டடம் பயன்பாடின்றி பாழாகி வருவதாக நகர மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

 இதுகுறித்து கூட்டுறவு சங்க அதிகாரிகளிடம் கேட்டபோது,

 சாயநீர் சுத்திகரிப்பு அமைப்பு கட்டடம் ஆரணியில் இருந்து சுமார் 3 கி.மீ. தூரத்தில் உள்ளது. இதனால், பட்டு நூல்களை அங்கு சாயம் போட்டு எடுத்து வர சிரமம் ஏற்படுகிறது என்றனர்.

 இதுகுறித்து நகர மக்கள் கூறுகையில், சாயநீர் சுத்திகரிப்பு கட்டடத்திலேயே சாயம் போட வேண்டும்.

தற்போது கூட்டுறவு சங்கம் இருக்கும் இடத்திலேயே சாயம் போடுவதால் சாயக்கழிவு நீரால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. பட்டு சாயக்கழிவு நீர் கால்வாய் வழியாக பையூர் ஏரியில் கலக்கிறது.

இதனால் நீர் நச்சுத்தன்மை அடைந்துள்ளது. எனவே, சாயநீர் சுத்திகரிப்பு கட்டடத்தை கூட்டுறவு சங்கங்கள் பயன்படுத்த வேண்டும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.