முகப்பு
வேலூர்

ஒரே ஊருக்கு 2 பெயர்கள்!

செய்யாறு, அக்.1: திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே ஊருக்கு இரண்டு பெயர்கள் உள்ளதால் பொதுமக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் தபால் சேவையிலும் தாமதம் ஏற்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.  திருவண்ணாமலை மா

வேலூர்

ஒரே ஊருக்கு 2 பெயர்கள்!

செய்யாறு, அக்.1: திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே ஊருக்கு இரண்டு பெயர்கள் உள்ளதால் பொதுமக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் தபால் சேவையிலும் தாமதம் ஏற்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.  திருவண்ணாமலை மா

Updated On : 27 டிசம்பர், 2023 at 5:44 PM
பகிர்:

செய்யாறு, அக்.1: திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே ஊருக்கு இரண்டு பெயர்கள் உள்ளதால் பொதுமக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் தபால் சேவையிலும் தாமதம் ஏற்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

 திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது செய்யாறு நகரம். சட்டப் பேரவைத் தொகுதி, மாவட்டத்தின் இரண்டாவது வருவாய் கோட்டம், அரசு அலுவலகங்களின் தலைமையிடம் போன்ற அந்தஸ்துகளை பெற்றுள்ளது இந்நகரம்.

 நகரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம், காவல் நிலையம், கோட்டாட்சியர் அலுவலகம், வருவாய்த்துறை அலுவலகம், வேளாண்மைத் துறை, ஊராட்சி ஓன்றிய அலுவலகம், தீயணைப்பு நிலையம், கலைக்கல்லூரி, கல்வி மாவட்டம், கூட்டுறவு சர்க்கரை ஆலை, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துக்கழக பணிமனை என மாநில அரசு அலுவலகங்கள், ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, கரூர் வைஸ்யா வங்கிகளின் பெயர் பலகைகளில் "செய்யாறு' என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால், நகராட்சி அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகங்கள், மத்திய அரசின் தபால் நிலையம், தொலைபேசித் துறை அலுவலகங்களின் பெயர் பலகைகளில் "திருவத்திபுரம்' என்று எழுதப்பட்டுள்ளது.

 நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தின் பெயர் பலகையில் "செய்யாறு' என்று எழுதப்பட்டுள்ளது. இதே துறை சார்பில் சாலையோரங்களில் உள்ள மைல் கற்களில் "திருவத்திபுரம்' என்று எழுதப்பட்டுள்ளது.

 இதுபோன்ற பெயர் மாற்றங்களால், திருவத்திபுரம் என்பதும், செய்யாறு என்பதும் ஒரே ஊரா, வெவ்வேறு ஊரா எனத் தெரியாமல் குழப்பம் அடைகின்றனர்.

 தபால் துறையிலும் குழப்பம்: கடிதம் எழுதும்போது கூட செய்யாறு என்று எழுதியிருந்தாலும், திருவத்திபுரம்-604 407 என்று எழுதி அனுப்பினால் மட்டும்தான் கடிதம் வந்து சேரும். இதுபோல சிலர் மட்டும்தான் கடிதம் எழுதுகின்றனர். சில கடிதங்களில் அஞ்சல் துறையினரே திருவத்திபுரம் என்று எழுதி அனுப்புவார்கள்.

 கடிதத்தில், செய்யாறு-604407, திருவத்திபுரம்-604407 என்று எழுதப்பட்ட கடிதங்கள் மட்டும்தான் செய்யாறுக்கு வந்து சேரும்.

 பின்கோடு எண் இல்லாமல் செய்யாறு என்ற ஊர் பெயர் மட்டும் குறிப்பிடப்படும் பெரும்பாலான கடிதங்கள் வந்து சேர்வதில்லை என்ற குற்றச்சாட்டு பொதுமக்கள் மத்தியில் உள்ளது.

 ஓரே ஊருக்கு இரண்டு பெயர்கள் இருப்பதால் செய்யாறுக்கு கடிதப் போக்குவரத்தும் சற்று குறைவாகத்தான் உள்ளது.

 அனைவராலும் "செய்யாறு' என்று பாசமாக அழைக்கப்படும் பெயரையே நகரில் உள்ள அனைத்து மத்திய, மாநில அரசு அலுவலகங்களுக்கும் வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →