முகப்பு
வேலூர்

வரும் பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு அருந்ததி மக்கள் கட்சி ஆதரவு

திருவண்ணாமலை, ஜன. 8: வரும் பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு அருந்ததி மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும் என அதன் நிறுவனத் தலைவரும், காலணி, தோல் தொழிலாளர் நல வாரியத் தலைவருமான வலசை. ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.  

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:04 PM
பகிர்:

திருவண்ணாமலை, ஜன. 8: வரும் பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு அருந்ததி மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும் என அதன் நிறுவனத் தலைவரும், காலணி, தோல் தொழிலாளர் நல வாரியத் தலைவருமான வலசை. ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.

 அருந்ததி இனத்தவருக்கு 3 சத உள்ஒதுக்கீடு, சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனுக்கு மணிமண்டபம், வாரியத் தலைவர் பதவி அளித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அருந்ததியர் எழுச்சி மாநாடு சனிக்கிழமை திருவண்ணாமலையில் நடைபெற்றது.

 மாநில கொள்கை பரப்புச் செயலர் பொன். பலராமன் தலைமை தாங்கினார். உணவுத் துறை அமைச்சர் எ.வ.வேலு. எம்.எல்.ஏ.க்கள் கு.பிச்சாண்டி, ஆர்.சிவானந்தம், ஒன்றியக் குழுத் தலைவர்கள் கே.ஆர்.சீதாபதி, பன்னீர்செல்வம் உள்பட பலர் பேசினர்.

 நிறுவனத் தலைவர் வலசை.ரவிச்சந்திரன் பேசியது: மிகவும் பின்தங்கியிருந்த அருந்ததி இன மக்களுக்கு முதல்வர் கருணாநிதி 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டார். முன்பு வெறும் 13 பேரே மருத்துவம், பொறியியல் படிப்புகளில் சேரும் நிலை இருந்தது. ஆனால் இட ஒதுக்கீடு தந்த பின் 56 பேர் மருத்துவம், 1,165 பேர் பொறியியல் பாடப் பிரிவுகளில் சேர்ந்து பயின்று வருகின்றனர்.

 காலணி, தோல் தொழிலாளர் வாரியம் தொடங்கப்பட்ட பின் 1000 பேருக்கு ரூ. 10 லட்சம் செலவில் களப்பணி கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேம்பட்ட தொழில்நுட்பப் பயிற்சி, காலணி தொழிற்கூடம் அமைக்கவும் முதல்வரிடம் கோரப்பட்டுள்ளது.

 வரும் பேரவைத் தேர்தலில் திமுக மீண்டும் வெற்றி பெற அருந்ததி மக்கள் கட்சி பாடுபடும் என்றார் ரவிச்சந்திரன்.

முழு கட்டுரையைப் படிக்க →