முகப்பு
வேலூர்

பதிவு செய்து 2 மாதங்கள் கழித்தே காஸ் சிலிண்டர்!

அரக்கோணம், நவ. 8: அரக்கோணத்தில் ஒரு காஸ் ஏஜென்சியில் பதிவு செய்த 2 மாதங்கள் கழித்தே காஸ் சிலிண்டர் விநியோகிக்கப்படுவதாக நுகர்வோர் புகார் தெரிவிக்கின்றனர். கடந்த 6 மாதமாக காஸ் சிலிண்டர்களை சரியாக விநிய

Updated On : 28 டிசம்பர், 2023 at 7:03 PM
பகிர்:

அரக்கோணம், நவ. 8: அரக்கோணத்தில் ஒரு காஸ் ஏஜென்சியில் பதிவு செய்த 2 மாதங்கள் கழித்தே காஸ் சிலிண்டர் விநியோகிக்கப்படுவதாக நுகர்வோர் புகார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 6 மாதமாக காஸ் சிலிண்டர்களை சரியாக விநியோகிக்காமல், செயற்கை தட்டுபாடு ஏற்படுத்தப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக பதிவு செய்து 80 நாள்களாகியும் சிலிண்டர் விநியோகிக்கவில்லை என்றும்,  வாடிக்கையாளர்கள் சென்று கேட்டால் "எங்களுக்கு வரவில்லை' என்ற பதிலையே மீண்டும், மீண்டும் கூறுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இந்தத் தட்டுபாட்டைக் கண்டித்து அரக்கோணம், விண்டர்பேட்டை, குருவராஜபேட்டை உள்ளிட்ட இடங்களில் நுகர்வோர்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து அரக்கோணம் மளிகை வியாபாரிகள் சங்கத்தின் செயலர் ஜி.டி.அசோகன் கூறுகையில்,

அரக்கோணத்தில் பலர் 70 முதல் 80 நாள்கள் வரை பதிவு செய்து விட்டு, காஸ் சிலிண்டர் கிடைக்காத நிலையுள்ளது.

குறிப்பிட்ட காஸ் ஏஜென்சி மீது நிறுவன அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனில், அந்த அலுவலகத்தை பூட்டு போடும் போராட்டம் நடத்துவோம்.

இதுதொடர்பாக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.