பணி முடிந்தும் பயன்பாட்டுக்கு வராத அரசுக் கட்டடங்கள்
செய்யாறு, செப்.7: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில், கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தும், பயன்பாட்டுக்கு வராத நிலையில் பல்வேறு அரசுக் கட்டடங்கள் உள்ளன. இவை எப்போது திறக்கப்படும் என பொதுமக்கள்
வேலூர்பணி முடிந்தும் பயன்பாட்டுக்கு வராத அரசுக் கட்டடங்கள்
செய்யாறு, செப்.7: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில், கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தும், பயன்பாட்டுக்கு வராத நிலையில் பல்வேறு அரசுக் கட்டடங்கள் உள்ளன. இவை எப்போது திறக்கப்படும் என பொதுமக்கள்
செய்யாறு, செப்.7: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில், கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தும், பயன்பாட்டுக்கு வராத நிலையில் பல்வேறு அரசுக் கட்டடங்கள் உள்ளன. இவை எப்போது திறக்கப்படும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சுகாதார அலுவலகம்
செய்யாறில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகம் பல ஆண்டுகளாக வாடகைக் கட்டடத்தில் இயங்கிவரும் நிலையில் இந்த அலுவலகத்துக்கு, செய்யாறு பழைய மருத்துவமனை தெருவில் ரூ. 54 லட்சம் மதிப்பில் புதியக் கட்டடம் கட்டப்பட்டு சுமார் ஓராண்டுக்கும் மேலாகிறது. இக் கட்டடம் திறப்பு விழா காணப்படாததால், நரசிம்ம நகரில் தனியாருக்கு சொந்தமான கட்டடத்தில் இயங்கி வருகிறது. இதற்காக மாத வாடகையாக சுமார் ரூ.20 ஆயிரம் வரை செலுத்துகின்றனராம்.
தனிக் கிளைச்சிறை
÷செய்யாறு காவல் நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ளது தனிக் கிளைச் சிறை. செய்யாறு சப்-டிவிஷனில் உள்ள போலீஸôரால் கைது செய்யப்படும் குற்றவாளிகளை பாதுகாப்பாக வைப்பதற்கும், நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்துவதற்காகவும் அமைக்கப்பட்டதுதான் இந்த கிளைச்சிறை. இந்த சிறைச்சாலை, சிறைத் துறையினரின் நிர்வாக வசதிக்காகவும், பாதுகாப்பு கருதியும் தனி கிளைச் சிறையாக மாற்றி சில ஆண்டுகள் செயல்படுத்தினர்.
பின்னர் இந்த கிளைச் சிறையை தமிழக அரசு விலக்கிக் கொண்டது. எனினும் கிளைச் சிறையில் தமிழக அரசு சார்பில் சீரமைப்பு செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்தும் செயல்படுத்தப்படாமல் உள்ளது.
÷இதனால் மோரணம், பிரம்மதேசம், தூசி, அனக்காவூர், பெரணமல்லூர், செய்யாறு ஆகிய காவல் சரகப் பகுதிகளில் குற்றவாளிகளை செய்யாறு பகுதியில் உள்ள நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தி, பின்னர்
சிறையில் அடைக்க வேலூர், வந்தவாசி ஆகிய பகுதிகளுக்கு காவல் துறையினர் சிரமப்பட்டு அழைத்துச் செல்கின்றனர்.
இதனால் காவல் துறையினருக்கு பணமும் நேரமும் விரையமாகிறது.
நவீன ஆடு அறுக்கும் தொட்டி
÷திருவத்திபுரம் நகராட்சி சார்பில் 2007-08-ல் பகுதி-2 திட்டத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் நவீன ஆடு அறுக்கும் தொட்டி கட்டப்பட்டது.
இந்தக் கட்டடம் கட்டப்பட்டு சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் திறப்பு விழா காணாமல் உள்ளது.
செய்யாறு பகுதியில் ஆங்காங்கே உள்ள ஆட்டிறைச்சிக் கடைகள் அனைத்தும் ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் அமைய வேண்டும் என்ற நோக்கத்தோடு கட்டடம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வராததால் நகரப் பகுதியில் ஆட்டிறைச்சிக் கடைகள் ஆங்காங்கே சுகாதாரம் இல்லாமல் காணப்படுகின்றன.
இவற்றை திறக்க மாவட்ட நிர்வாகமும், உரிய துறைகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என செய்யாறு மக்கள் எதிர்பார்க்கின்றனர்.