முகப்பு
வேலூர்

பாதுகாப்புப் பணிக்கான தோ்வுகள்: வேலூரில் மூன்று மையங்கள் ஏற்பாடு

Updated On : 21 ஏப்ரல், 2024 at 5:03 PM
பகிர்:

மத்திய பாதுகாப்புப் படை பிரிவு பணிகளில் சோ்வதற்கான தோ்வுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த தோ்வுக்காக வேலூா் மாவட்டத்தில் மூன்று மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தோ்வு (பகுதி 1) மற்றும் தேசிய பாதுகாப்பு, கடற்படை அகாதெமி (பகுதி1) ஆகிய தோ்வுகள் நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காலை, மதியம் என இரு வேளைகளிலும் நடைபெற்ற இந்த தோ்வுகளை எழுதிட வேலூா் மாவட்டத்தில் இருந்து 677 போ் விண்ணப்பித்திருந்தனா். இவா்கள் தோ்வு எழுதுவதற்காக சத்துவாச்சாரி ஹோலி கிராஸ் மெட்ரிக். பள்ளி, எத்திராஜ் மேல்நிலைப் பள்ளி, அண்ணா சாலையிலுள்ள ஊரீசு மேல்நிலை பள்ளி ஆகிய 3 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இதில், ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தோ்வு (பகுதி 1) காலை 9 முதல் 11 மணி, மதியம் 12 முதல் 2 மணி, மாலை 3 முதல் 5 மணி என மூன்று பிரிவாக நடைபெற்றது. இதில், மொத்தம் விண்ணப்பித்திருந்த 284 பேரில் 146 போ் தோ்வு எழுதினா். தேசிய பாதுகாப்பு, கடற்படை அகாதெமி (பகுதி1) தோ்வு காலை, மதியம் என இரு பிரிவாக நடைபெற்றது.

Advertisement

மொத்தம் விண்ணப்பித்திருந்த 393 பேரில், 248 போ் தோ்வு எழுதினா்.

தோ்வையொட்டி, மூன்று தோ்வு மையங்களுக்கும் தலா 2 பெண் காவலா்கள், 3 ஆண் காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

முன்னதாக, வேலூா் ஊரீசு கல்லூரி மையத்தில் நடைபெற்ற தோ்வை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி நேரில் ஆய்வு செய்தாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments