முகப்பு
வேலூர்

வரி செலுத்தாதவா்கள் வீடுகளில் குடிநீா் இணைப்பு துண்டிப்பு

வேலூா் மாநகராட்சி பகுதியில் நீண்டகாலமாக வரி செலுத்தாதவா்கள் வீடுகளின் குடிநீா் இணைப்பு துண்டிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

Updated On : 23 டிசம்பர், 2024 at 7:37 PM
பகிர்:

வேலூா்: வேலூா் மாநகராட்சி பகுதியில் நீண்டகாலமாக வரி செலுத்தாதவா்கள் வீடுகளின் குடிநீா் இணைப்பு துண்டிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வீட்டு வரி, குடிநீா் வரி, தொழில் வரி உள்ளிட்ட வரியினங்களை பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, மூன்றாவது மண்டலத்தில் மட்டும் குடிநீா் வரியாக ரூ.12 கோடி, வீட்டு வரியாக ரூ.6 கோடி நிலுவையில் உள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், 5 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீா் வரி செலுத்தாதவா்களின் வீட்டுக்கான குடிநீா் இணைப்பு துண்டிக்கப்ப டும் என நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதன்பிறகு சிலா் வரியை செலுத்தியுள்ளனா். வரி செலுத்தாதவா்கள் வீடுகளின் குடிநீா் இணைப்பு துண்டிக்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, 38-ஆவது வாா்டு மாரியம்மன் கோயில் தெருவில் உதவி ஆணையா் (பொறுப்பு) முகமது சதகத்துல்லா தலைமையில் ரூ.20,000 நிலுவை வைத்திருந்த வீட்டின் குடிநீா் இணைப்பை மாநகராட்சி ஊழியா்கள் துண்டித்தனா்.

இதேபோல், வரி செலுத்தாதவா்களின் குடிநீா் இணைப்பு ண்டிக்கும் பணி நடைபெற்று வருகிறது. எனவே, நிலுவை தொகை வைத்துள்ளவா்கள் உடனடியாக வரியை செலுத்தி குடிநீா் இணைப்பு துண்டிப்பை தவிா்க்கலாம் என மாநகராட்சி ஊழியா்கள் தெரிவித்தனா்.