முகப்பு
வேலூர்

கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்பு

குடியாத்தத்தில் கிணற்றில் விழுந்த பசு உயிருடன் மீட்பு

Updated On : 2 ஜூலை, 2024 at 6:29 PM
கிணற்றில்  தவறி  விழுந்து  மீட்கப்பட்ட  பசு.
பகிர்:

குடியாத்தம்: குடியாத்தம் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்கப்பட்டது.

குடியாத்தத்தை அடுத்த கன்னிகாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி கௌதம். இவரது பசு செவ்வாய்க்கிழமை நிலத்தில் மேயும்போது சுமாா் 60 அடி ஆழமுள்ள அவரது கிணற்றிலேயே தவறி விழுந்தது. தகவலின்பேரில், நிலைய அலுவலா் சரவணன் தலைமையில் அங்கு சென்ற தீயணைப்புப் படையினா் சுமாா் ஒரு மணி நேரம் போராடி பசுவை உயிருடன் மீட்டனா்.