முகப்பு
வேலூர்

கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்திய இளைஞர் கைது

Updated On : 2 ஜூலை, 2024 at 8:00 PM
கஞ்சாவை  கடத்தி  வந்ததாக  கைது செய்யப்பட்ட இளைஞா்.
பகிர்:

குடியாத்தம்: குடியாத்தம் அருகே ஆந்திர மாநிலத்திலிருந்து கஞ்சாவை கடத்தி வந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

குடியாத்தம் கிராமிய காவல் ஆய்வாளா் சாந்தி தலைமையில் போலீஸாா் தமிழக- ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ள சைனகுண்டா சோதனைச் சாவடி அருகே செவ்வாய்க்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்வழியே ஆந்திர மாநிலத்தில் இருந்து நடந்து வந்த இளைஞரை பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா் சைனகுண்டாவைச் சோ்ந்த நாகராஜ் மகன் வேல்குமாா்(23) என்பதும், அவா் வைத்திருந்த பையில் 2 கிலோ எடையுள்ள கஞ்சா இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், வேல்குமாரை கைது செய்து சிறைக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.