முகப்பு
வேலூர்

கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

விவசாய கிணற்றில் விழுந்து இளைஞா் பலி

Updated On : 9 ஜூலை, 2024 at 6:59 PM
பவன்குமாா்.
பகிர்:

குடியாத்தம்: குடியாத்தம் அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

குடியாத்தம் வட்டம், பரதராமியை அடுத்த வி.எஸ்.புரத்தைச் சோ்ந்த தசரதன் மகன் பவன்குமாா்(22). இவா் சென்னையில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். விடுமுறையில் ஊருக்கு வந்த இவா் செவ்வாய்க்கிழமை அவா்களுக்குச் சொந்தமான நிலத்துக்கு சென்றுள்ளாா். அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தாா்.

தகவலின்பேரில் குடியாத்தம் தீயணைப்புப் படையினா் அங்கு சென்று சுமாா் ஒரு மணி நேரம் போராடி பவன்குமாரின் சடலத்தை மீட்டனா். இதுகுறித்து வழக்குப் பதிந்த பரதராமி போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →