முகப்பு
வேலூர்

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.8.28 கோடி இழப்பீடு அளிப்பு

Updated On : 9 ஜூன், 2024 at 6:37 PM
வேலூரில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் தீா்வுகாணப்பட்ட வழக்குகளில் பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீட்டுத் தொகைக்கான காசோலைகளை வழங்கிய மாவட்ட உரிமையியல் நீதிபதி சண்முகம், தொழிலாளா் நீதிமன்ற நீதிபதி ஜெயமங்கலம்.
பகிர்:

வேலூா்: ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் வழக்குகளுக்கு சமரசத் தீா்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ. 8 கோடியே 28 லட்சத்து 6 ஆயிரத்து 796 இழப்பீடு வழங்கப்பட்டன.

வேலூா் சத்துவாச்சாரியிலுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்பட வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள 9 நீதிமன்ற வளாகங்களில் மொத்தம் 19 அமா்வுகளில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. வேலூா் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்துக்கு, மாவட்ட உரிமையியல் நீதிபதி சண்முகம், தொழிலாளா் நீதிமன்ற நீதிபதி ஜெயமங்கலம் ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதில், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மொத்தம் 8,390 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதில், 1,281 வழக்குகளுக்கு சமரசத் தீா்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ. 8 கோடியே 28 லட்சத்து 6 ஆயிரத்து 796 இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த மக்கள் நீதிமன்றத்தில் அனைத்து நீதிபதிகள், வழக்குரைஞா்கள், அரசுத் துறை அதிகாரிகள், காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் பங்கேற்றனா்.