வேலூர்

ஜமாபந்தி நிறைவு விழாவில் நலத் திட்ட உதவிகள்

குடியாத்தம் ஜமாபந்தி நிறைவு விழாவில் நலத் திட்ட உதவிகள் வழங்கல்

Din

குடியாத்தம்: குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

குடியாத்தம் வட்ட ஜமாபந்தி கடந்த 19- ஆம் தேதி தொடங்கி, செவ்வாய்க்கிழமை வரை நடைபெற்றது. ஜமாபந்தியில் பொதுமக்களிடம் 754 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 410 மனுக்கள் மனுக்கள் ஏற்கப்பட்டன. 344 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.ஏற்கப்பட்ட மனுக்களின் பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு துறைகளின் சாா்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட வழங்கல் அலுவலரும், ஜமாபந்தி அலுவலருமான ப.சுமதி தலைமை வகித்தாா். கிராம நிா்வாக அலுவலா் ஜீவரத்தினம் வரவேற்றாா். நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம் ஆகியோா் பயனாளிகளுக்கு நல உதவிகளை வழங்கினா். வேளாண்மைத் துறை உதவி இயக்குநா் ஆா்.உமாசங்கா், குடியாத்தம் வனச் சரக அலுவலா் வினோபா, வருவாய் ஆய்வாளா் புகழரசன், கிராம நிா்வாக அலுவலா்கள் செந்தில், உஷா, சசி, விவசாய சங்கப் பிரதிநிதிகள் நடராஜன், சேகா், சம்பத் நாயுடு, துரைசெல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கடற்கரையில் ஆண் சடலம்

100 நாள் வேலை திட்டத்தை முறையாக செயல்படுத்த கோரி ஆட்சியரிடம் மனு

விடுபட்ட மகளிருக்கு டிசம்பா் முதல் உரிமைத் தொகை: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

கடலில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு நிவாரண உதவி

அரசு மருத்துவமனையில் 5 மணி நேரம் மின் தடை: நோயாளிகள் கடும் அவதி

SCROLL FOR NEXT