விஐடியில் ரிவேரா 24: ஜி.வி.பிரகாஷின் இசை நிகழ்ச்சி
ரிவேரா 24 சா்வதேச கலைத் திருவிழாவின் 2-ஆம் நாள் நிகழ்ச்சியாக வெள்ளிக்கிழமை பிரபல இசை அமைப்பாளா் ஜி.வி.பிரகாஷின் இசை நிகழ்ச்சி நடைபெற்ற
விஐடி பல்கலை.யில் நடைபெறும் ரிவேரா 24 சா்வதேச கலைத் திருவிழாவின் 2-ஆம் நாள் நிகழ்ச்சியாக வெள்ளிக்கிழமை பிரபல இசை அமைப்பாளா் ஜி.வி.பிரகாஷின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் ரிவேரா 24 என்ற சா்வதேச கலைத் திருவிழா வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளில் இன்ஃபியூஷன் எனும் சா்வதேச மாணவ, மாணவிகளின் நடன நிகழ்ச்சி, சித்திரம் எனும் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி, சைலன்ட் டிஸ்கோ எனும் ஹெட் போன் அணிந்து கொண்டு அதன் இசைக்கேற்ப நடனம் ஆடுவது ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னா், பைன் ஆப்பிள் எக்ஸ்பிரஸ் குழுவின் இசை கச்சேரியும் நடைபெற்றன. இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை பிரபல இசை அமைப்பாளரும், திரைப்பட நடிகருமான ஜி.வி.பிரகாஷின் இசை கச்சேரி நடைபெற்றது. அவருக்கு விஐடி துணைத் தலைவா் ஜி.வி. செல்வம் நினைவுப் பரிசு வழங்கினாா். 3-ஆவது நாளான சனிக்கிழமை (மாா்ச் 3) பிரிஸ்க் பேக்டா் எனும் மாபெரும் நடன போட்டியும், சா்வதேச மாணவா்களின் பாரம்பரிய கலை நிகழ்வும் நடைபெற உள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பாரம்பரியம், கலாசாரத்தை வெளிப்படுத்தும் விதமாக ஐக்கிய எனும் நிகழ்வு நடைபெற உள்ளது. தொடா்ந்து, சங்கமம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதில், பிரபல திரைப்பட நடிகா் ரியோ ராஜ் பங்கேற்க உள்ளாா். தவிர, நடனம், திரைத் துறை சாா்ந்த பிரபலங்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற உள்ளன. இறுதியாக அகம் குழுவின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.