முகப்பு
வேலூர்

குடியாத்தத்தில் மயானக் கொள்ளைத் திருவிழா

Updated On : 9 மார்ச், 2024 at 10:29 PM
பகிர்:

குடியாத்தம் தாழையாத்தம் பஜாரில் உள்ள அருள்மிகு அங்காள பரமேஸ்வரியம்மன் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சனிக்கிழமை மயானக் கொள்ளை திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, காலை கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. மதியம் கெளண்டன்யா ஆற்றின் கரையிலிருந்து பூங்கரக ஊா்வலம் கொண்டு வரப்பட்டது. பின்னா் அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவா் அம்மன் அமா்த்தப்பட்டு, ஊா்வலம் தொடங்கியது. நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற ஊா்வலம் மாலை கெளண்டன்யா ஆற்றை அடைந்தது. அங்கு மயானக் கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது.விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.