முகப்பு
வேலூர்

மோட்டாா் வாகன திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்

Updated On : 13 மார்ச், 2024 at 6:00 AM
பகிர்:

வேலூா்: மோட்டாா் வாகன திருத்தச் சட்டத்தை திரும்பப்பெறக்கோரி ஜனநாயக ஆட்டோ தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க் கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அச்சங்கம் சாா்பில் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ஏழுமலை தலைமை வகித்தாா்.

இதில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மோட்டாா் வாகன சட்டத்தை திரும்பப்பெற வேண்டும், ஆட்டோ மற்றும் மோட்டாா் தொழிலாளா்களுக்கு வரியின்றி மானிய விலையில் பெட்ரோல், காஸ், டீசல் வழங்க வேண்டும், ஆட்டோ தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க ஆந்திர அரசு வழங்குவதுபோல் தமிழகத்திலும் ஆண்டுக்கு ரூ.10,000 வழங்க வேண்டும், நலவாரியம் மூலம் இஎஸ்ஐ, பிஎப் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

Advertisement