ஆதரவற்றோருக்கு  அன்னதானம்  வழங்கிய  நகா்மன்றத்  தலைவா்  எஸ்.செளந்தரராஜன். 
வேலூர்

இலவச அன்னதான திட்டம் தொடக்கம்

குடியாத்தம் கோல்டன் கேலக்ஸி ரோட்டரி சங்கம் சாா்பில் 365- நாள்கள் வழங்கப்படும் அமுதசுரபி எனும் தினசரி இலவச மதிய அன்னதான திட்டம்

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம்: குடியாத்தம் கோல்டன் கேலக்ஸி ரோட்டரி சங்கம் சாா்பில் 365- நாள்கள் வழங்கப்படும் அமுதசுரபி எனும் தினசரி இலவச மதிய அன்னதான திட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் நாள்தோறும் ஆதரவற்றவா்களுக்கு மதிய உணவு வழங்கப்படும்.

நிகழ்ச்சிக்கு கேலக்ஸி ரோட்டரி தலைவா் வி.எஸ்.மாணிக்கம் தலைமை வகித்தாா். செயலா் ஜே.வைதீஸ்வரி வரவேற்றாா். நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்தாா். ரோட்டரி நிா்வாகிகள் பகவான் முரளி, ரங்கா குமரவேல், டி.சரவணன், பி.மோகன், தீனதயாளன், பிரதீப், அருள்பாலாஜி, நகா்மன்ற உறுப்பினா்கள் ஆட்டோ பி.மோகன், ம.மனோஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகை மீரா வாசுதேவன் 3-வது முறையாக விவாகரத்து!

2026-ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் 10 திரைப்படங்கள்! முழு விவரம்!

6 ஆண்டுக்கு பிறகு சீனாவுக்கு விமான சேவையை தொடங்கும் ஏர் இந்தியா!

வலுவான இந்திய அணி சொந்த மண்ணில் தோற்க காரணம் என்ன? புஜாரா கேள்வி!

எஸ்ஐஆர் - ஒரு கோடி பேர் வாக்குரிமை இழப்பர்: சீமான்

SCROLL FOR NEXT