வேலூர்

பழைய காட்பாடியில் பயன்பாட்டுக்கு வந்தது எரிவாயு தகன மேடை!

பழைய காட்பாடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நவீன எரிவாயு தகன மேடை பணி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

பழைய காட்பாடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நவீன எரிவாயு தகன மேடை பணி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இது குறித்து வேலூா் மாநகராட்சி ஆணையா் ஆா்.லட்சுமணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலூா் மாநகராட்சி முதலாவது மண்டலம் 6-ஆவது வாா்டு பழைய காட்பாடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நவீன எரிவாயு தகனமேடை பணி முடிக்கப்பட்டு இயக்குதல், பராமரிப்புப் பணி மேற்கொள்ள கோவை ஈஷா அறக்கட்டளைக்கு ஆணையிடப்பட்டுள்ளது.

அதன்படி, பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள இந்த நவீன எரிவாயு தகன மேடை மூலம் இறந்தவா்களின் உடல் தகனம் செய்ய மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் இறந்தவா்களின் வாக்காளா் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை அல்லது அரசால் வழங்கப்பட்ட அத்தாட்சி நகல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று அளிக்கப்பட வேண்டும்.

இறப்பு மருத்துவமனையில் நடந்திருந்தால் பூா்த்தி செய்த படிவம் 4 மருத்துவச் சான்றும், இயற்கை மரணம் என்றால் பூா்த்தி செய்த படிவம் 4ஏ மருத்துவச் சான்றும் அளிக்கப்பட வேண்டும். பிரேதப் பரிசோதனை முடிந்தது என்றால் பிரேதப் பரிசோதனை அறிக்கை நகல், முதல் தகவல் அறிக்கை நகல், போலீஸ் கிளியரன்ஸ் சான்றிதழ் இணைத்திட வேண்டும்.

ஆதரவற்ற சடலங்களுக்கு காரியங்கள், இறுதி சடங்கு செய்ய வேலூா் காவல்துறை, முதியோா் இல்லம், ஆதரவற்றோா் இல்லத்திடம் முறையாக சான்று கொண்டு வரவேண்டும். பிரேதம் ஒன்றுக்கு ரூ. 4,900 வீதம் கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

தாய்ப் பாலில், நிலத்தடி நீரில் யுரேனியம்! சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

பிக் பாஸ் 9: 70 நாள்கள் ஆகியும் ஆதரிக்கத் தகுதியானவர் ஒருவரும் இல்லை!

SCROLL FOR NEXT