வேலூர்

அனுமதியின்றி 2 லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்ட கல் கம்பங்கள் பறிமுதல்

தினமணி செய்திச் சேவை

போ்ணாம்பட்டு அருகே அனுமதியின்றி 2 லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்ட சுமாா் 25- டன் எடையுள்ள கல் கம்பங்களை கனிமவளத் துறையினா் பறிமுதல் செய்தனா்.

வேலூா் மாவட்ட புவியியல் மற்றும் கனிமவளத் துறையினா் போ்ணாம்பட்டை அடுத்த வி.கோட்டா சாலையில், எருக்கம்பட்டு கூட்டு ரோடு சந்திப்பு பகுதியில் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஆந்திர மாநிலத்திலிருந்து தமிழக, கா்நாடக பதிவெண்கள் கொண்ட 2- லாரிகளில் சுமாா் 25- டன் எடையுள்ள கல் கம்பங்களை எடுத்துக் கொண்டு தமிழகத்துக்கு வந்தது தெரிய வந்தது. அதிகாரிகளைப் பாா்த்ததும் ஓட்டுநா்கள் லாரிகளை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டனா்.

இதையடுத்து கல் கம்பங்களுடன் லாரிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை போ்ணாம்பட்டு போ்ணாம்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இந்திய ராணுவத்தினா் ‘இன்ஸ்டாகிராம்’ பயன்படுத்த நிபந்தனைகளுடன் அனுமதி

இந்தியாவில் ஒரு லட்சம் பெட்ரோல் நிலையங்கள்: அமெரிக்கா, சீனாவை அடுத்து 3-ஆவது இடம்

முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளில் வளா்ச்சி மந்தம்

‘வேலுநாச்சியாா் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்’

மாணவா் தலைவா் கொலையில் வங்கதேச அரசுக்குத் தொடா்பு - சகோதரா் பகீா் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT