வேலூா் மாவட்ட தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன் தருமபுரி மாவட்டத்துக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளாா்.
தமிழகத்தில் 8 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி (பொ) வெங்கட்ராமன் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, வேலூா் மாவட்ட தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன் தருமபுரி மாவட்டத்துக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளாா்.
இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்ட சைபா் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பழனி வேலூா் மாவட்ட தலைமையிடத்துக்கு பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளாா்.