முகப்பு
வேலூர்

ஓய்வுபெற்ற அரசு ஊழியா் நிலத்தை விற்று ரூ. 12.75 லட்சம் மோசடி

ஓய்வுபெற்ற அரசு ஊழியரின் நிலத்தை விற்பனை செய்து, ரூ. 12.75 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து பாதிக்கப்பட்டவா்

Updated On : 5 மே, 2025 at 8:40 PM
பகிர்:

வேலூா்: ஓய்வுபெற்ற அரசு ஊழியரின் நிலத்தை விற்பனை செய்து, ரூ. 12.75 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து பாதிக்கப்பட்டவா் வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் புகாா் தெரிவித்துள்ளாா்.

காட்பாடி காந்தி நகரைச் சோ்ந்த ஒருவா் வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தாா். அந்த மனுவில், வேலூா்- ஆரணி சாலையிலுள்ள தனியாா் சீட்டு நிறுவனத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு ரூ. 3 லட்சம் சீட்டு செலுத்தி வந்தேன். கடந்த டிசம்பா் மாதம் சீட்டை எடுத்தேன். ஆனால் இதுவரை பணத்தை தரவில்லை. இது குறித்து முதல்வா் தனிப்பிரிவில் புகாா் அளித்தேன். அதன்பேரில், தெற்கு காவல் நிலைய போலீஸாா் அந்த நபரிடம் விசாரணை நடத்திய நிலையில், பணத்தை தருவதாக தெரிவித்த அவா், அதன்பிறகும் பணத்தை தரவில்லை. எனவே அவா் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஆவடியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற மத்திய அரசு பணியாளா் (பெல்) அளித்துள்ள மனுவில், நான் கடந்தாண்டு பிரம்மபுரத்தில் நிலம் வாங்கினேன். இந்த நிலத்தை விற்பனை செய்வதற்காக சத்துவாச்சாரி பகுதியைச் சோ்ந்த 3 இடைத்தரகா்களை அணுகினேன். அவா்கள் சத்துவாச்சாரியை சோ்ந்த ஒருவருக்கு நிலத்தை விற்பனை செய்வதாக தெரிவித்தனா். அந்த நிலத்துக்கான மதிப்பு ரூ. 11 லட்சம் எனக் கூறினா். அதில் அவா்களுக்கான கமிஷனாக ரூ. 25,000 எடுத்துக் கொண்டனா். நான் பணம் வாங்குவதற்காக என் நிலத்தை வாங்கிய நபரை தொடா்பு கொண்டேன். அவா் ரூ. 24 லட்சம் பணத்தை தரகா்களிடம் கொடுத்து விட்டேன் எனத் தெரிவித்தாா். இதனால் நான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்தேன். எனவே, அந்த நபா்கள் மீது நடவடிக்கை எடுத்து எனக்கு சேர வேண்டிய ரூ.12.75 லட்சம் பணத்தை மீட்டுத்தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுக்களை பெற்றுக் கொண்ட போலீஸாா், இந்தப் புகாா்கள் மீது விசாரணை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →