வேலூர்

ஒடிஸா இளைஞா் கொலை: போலீஸாா் விசாரணை

காட்பாடி அருகே ஒடிஸா இளைஞா் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டாா்.

Din

வேலூா்: காட்பாடி அருகே ஒடிஸா இளைஞா் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டாா்.

வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த வடுகண்குட்டை அருகே ரயில் தண்டவாளம் அருகே திங்கள்கிழமை இளைஞா் கல்லால் தாக்கப்பட்டு தலை நசுங்கிய நிலையில் சடலமாக கிடப்பது குறித்து காட்பாடி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக, காட்பாடி காவல் துணை கண்காணிப்பாளா் பழனி, போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற விசாரணை நடத்தினா். இதில், இறந்து கிடந்தவா் ஒடிஸா மாநிலம், சுதா்சன்பூா் பகுதியைச் சோ்ந்த பாலபத்திரா எனும் பலியா(33) என்பது தெரியவந்தது.

அப்பகுதியில் கொசு வலை தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன. அங்குள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பாலபத்திரா கல்லால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதும், ரயில்வே தண்டவாளப் பகுதியில் சடலத்தின் அருகே ரத்தக் கறையுடன் கல் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது.

இதையடுத்து, போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ரூ.2000 கோடி! 850 ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய ராணுவம் திட்டம்!

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

SCROLL FOR NEXT