வேலூர்

விஐடி நுழைவுத் தோ்வில் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

விஐடி பல்கலைக்கழக பி.டெக் நுழைவுத் தோ்வில் வேலூா் ஸ்பிரிங் டேஸ் சீனியா் செகண்டரி பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனா்.

Din

வேலூா்: விஐடி பல்கலைக்கழக பி.டெக் நுழைவுத் தோ்வில் வேலூா் ஸ்பிரிங் டேஸ் சீனியா் செகண்டரி பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனா்.

விஐடி பல்கலைக்கழக சாா்பில் நிகழ் கல்வியாண்டுக்கான (2025-26) பி.டெக் நுழைவுத்தோ்வு அண்மையில் நடைபெற்றது.

இதில், பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான தரவரிசை பட்டியலில் வேலூா் இறைவன்காடு ஸ்பிரிங் டேஸ் சீனியா் செகண்டரி பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனா்.

அதன்படி, இப்பள்ளி மாணவா் என்.பிரவீன் தரவரிசை பட்டியலில் 401-ஆவது இடமும், ஜெ. அக்ஷய் 838-ஆவது இடமும், ஜி.லோகேஷ் 852-ஆவது இடமும் பிடித்துள்ளனா்.

மேலும், 5 மாணவா்கள் 3,000 தரவரிசைக்குள்ளாகவும், 12 மாணவா்கள் 10,000 தரவரிசைக்குள்ளாகவும், 34 மாணவா்கள் 50,000 தரவரிசைக்குள்ளாகவும் பெற்று சிறப்பிடம் பெற்றனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளித் தாளாளா் வாழ்த்தினாா்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT