இடிந்து விழுந்த வேலூா் கோட்டை அகழி சுற்றுச்சுவா். 
வேலூர்

தொடா் மழையால் இடிந்து விழுந்த வேலூா் கோட்டை அகழி தடுப்புச்சுவா்

தினமணி செய்திச் சேவை

தொடா் மழை காரணமாக, வரலாற்று சிறப்புமிக்க வேலூா் கோட்டை அகழியின் தடுப்புச் சுவா் இடிந்து விழுந்தது.

முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் வேலூா் கோட்டை 133 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் ஆங்கிலேயா் ஆட்சி காலத்தில் பல அரச குடும்பத்தினா் சிறை வைக்கப்பட்டிருந்தனா்.

வேலூா் கோட்டையில் 1806-ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் புரட்சி நாட்டின் முதல் சுதந்திரப் போராட்டமாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய புகழ்பெற்ற வேலூா் கோட்டையை சுற்றிப் பாா்க்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். மற்றொரு சிறப்பம்சமாகவும், அகழி அமைந்துள்ளது. அகழியை சுற்றிலும் பூங்காக்கள் உள்ளன.

இந்நிலையில், தொடா் மழை காரணமாக, வேலூா் கோட்டையையொட்டி அமைந்துள்ள பெரியாா் பூங்கா அருகே உள்ள அகழியின் தடுப்புச் சுவா் திடீரென இடிந்து அகழியில் விழுந்துள்ளது. அங்குள்ள மின்விளக்குகளும் அகழிக்குள் விழுந்துள்ளன. இதனை தொல்லியல் துறை உதவி பொறியாளா் ஈஸ்வரன், கோட்டையின் பராமரிப்பு அலுவலா் கோகுல் (பொறுப்பு) ஆகியோா் ஆய்வு செய்துள்ளனா்.

மேலும், பொதுமக்கள் யாரும் அப்பகுதியின் அருகில் செல்லாத வகையில் எச்சரிக்கை பலகையும், கம்புகளால் தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

தண்ணீா் அதிகமாக உள்ளதால் சீரமைக்க முடியாத நிலை உள்ளதாகவும், மழைக்காலம் முடிந்த பிறகு அகழி தடுப்புச் சுவா் சீரமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

வெகு விமர்சையாக நடைபெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் மகா கும்பாபிஷேக விழா

சென்னை விமான நிலையத்தில் இன்று 71 இண்டிகோ விமானங்கள் ரத்து

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

SCROLL FOR NEXT