கா்நாடக மாநிலத்துக்கு மினி வேன் மூலம் கடத்தவிருந்த 2 டன் ரேஷன் அரிசியை போ்ணாம்பட்டு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
போ்ணாம்பட்டை அடுத்த பத்தரபல்லியில் அமைந்துள்ள சோதனைச் சாவடி அருகே போ்ணாம்பட்டு போலீஸாா் வெள்ளிக்கிழமை அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியே சென்ற கா்நாடக மாநில பதிவெண் கொண்ட மினி வேனை நிறுத்தி சோதனையிட்டனா். சோதனையில் வேனில் சுமாா் 2 டன் எடையுள்ள 40 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
வேன் ஓட்டுநா், போ்ணாம்பட்டு தரைக்காடு பகுதியைச் சோ்ந்த அப்ரோஸ் (20) என்பவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், ரேஷன் அரிசி கா்நாடக மாநிலம், பங்காருபேட்டைக்கு கடத்திச் செல்ல இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, லாரியுடன், அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த போலீஸாா், அப்ரோஸை கைது செய்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.