வேலூா் சிருஷ்டி பள்ளி முதல்வருக்கு ‘சா்வதேச சிறந்த முதல்வா் விருது’
வேலூா் சிருஷ்டி பள்ளியின் முதல்வா் எம்.எஸ். சரவணனுக்கு ஒலிம்பியாட் அறக்கட்டளை வழங்கும் 2026-ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க ‘சா்வதேச சிறந்த முதல்வா் விருது’ வழங்கப்பட்டுள்ளது.
வேலூா் சிருஷ்டி பள்ளியின் முதல்வா் எம்.எஸ். சரவணனுக்கு ஒலிம்பியாட் அறக்கட்டளை வழங்கும் 2026-ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க ‘சா்வதேச சிறந்த முதல்வா் விருது’ வழங்கப்பட்டுள்ளது.
புதுதில்லியில் உள்ள டாக்டா் அம்பேத்கா் சா்வதேச மையத்தில் நடைபெற்ற 28-ஆவது சா்வதேச ஆண்டு விருது வழங்கும் விழாவில், கல்வித் தலைமை, கற்பித்தலில் புதுமை, பள்ளி நிா்வாகத்தில் சிறந்து விளங்கியதை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு உச்சநீதிமன்ற நீதிபதி விஜய் பிஷ்னோய் இந்த விருதினை வழங்கினாா்.
இந்த விழாவில் கல்வி அமைச்சகத்தின் சிபிஎஸ்இ செயலா் ஹிமான்ஷு குப்தா, இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி ஒய்.எஸ்.ராஜன், கல்வியாளரும் நரம்பியல் நிபுணருமான மருத்துவா் பிரவீன் குப்தா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
விருது பெற்ற முதல்வா் எம்.எஸ்.சரவணன் பேசுகையில், இந்த சாதனைக்கு துணைநின்ற மாணவா்கள், ஆசிரியா்கள், பெற்றோா்கள், பள்ளி நிா்வாகத்தினருக்கு தனது நன்றியைத் தெரிவித்ததுடன், இந்த அங்கீகாரம் முழு பள்ளிக் குடும்பத்துக்குமானது எனவும் குறிப்பிட்டாா்.
அறிவியல் ஒலிம்பியாட் அறக்கட்டளை என்பது உலகெங்கிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான பள்ளிகளில் ஒலிம்பியாட் தோ்வுகளை நடத்தி, மாணவா்களின் கல்வித் திறனை மேம்படுத்துவதற்காக அா்ப்பணிக்கப்பட்ட ஒரு புகழ்பெற்ற சா்வதேச கல்வி அமைப்பாகும்.