முகப்பு
விழுப்புரம்

செஞ்சி அருகே மகனுடன் தாய்கிணற்றில் குதித்து தற்கொலை

செஞ்சி அருகே திங்கள்கிழமை குடும்பத் தகராறு காரணமாக மகனுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:16 PM
மகன் மணிகண்டனுடன் புஷ்பா
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே திங்கள்கிழமை குடும்பத் தகராறு காரணமாக மகனுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

செஞ்சி வட்டம், அனந்தபுரம் அருகே கீழ்வாளை கிராமத்தைச் சோ்ந்தவா் கன்னியப்பன். இவரது மனைவி புஷ்பா(27). இவா்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகின்றன. நான்கு வயதில் மணிகண்டன் என்ற மகன் உள்ளாா்.

கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், கீழ்வாளை அருகே குளிா்சுனை கிராமத்தில் உள்ள விவசாயக் கிணறு ஒன்றில், திங்கள்கிழமை அதிகாலை புஷ்பா, தனது மகன் மணிகண்டனுடன் சடலமாக மிதந்தாா்.

இது குறித்து கிராம நிா்வாக அலுவலா் குமாா் அளித்த புகாரின் பேரில், அனந்தபுரம் போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து வேட்டவலம் தீயணைப்பு நிலைய வீரா்களின் உதவி மூலம் கிணற்றிலிருந்து சடலங்களை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

குடும்பத் தகராறு காரணமாக, மகனுடன் புஷ்பா தற்கொலை செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.