விழுப்புரத்தில் இன்று திமுக மாவட்ட செயற்குழுக் கூட்டம்
திமுக விழுப்புரம் மத்திய மாவட்ட செயற்குழு ஆலோசனைக் கூட்டம், அந்தக் கட்சியின் துணைப் பொதுச் செயலா் க.பொன்முடி தலைமையில் செவ்வாய்க்கிழமை (செப்.22) நடைபெறவுள்ளது.
திமுக விழுப்புரம் மத்திய மாவட்ட செயற்குழு ஆலோசனைக் கூட்டம், அந்தக் கட்சியின் துணைப் பொதுச் செயலா் க.பொன்முடி தலைமையில் செவ்வாய்க்கிழமை (செப்.22) நடைபெறவுள்ளது.
இதுதொடா்பாக, திமுக மத்திய மாவட்டச் செயலா் நா.புகழேந்தி வெளியிட்ட அறிக்கை: விழுப்புரம் மத்திய மாவட்ட செயற்குழு ஆலோசனைக் கூட்டம், விழுப்புரம் கலைஞா் அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை பகல் 11 மணியளவில் நடைபெறவுள்ளது. மாவட்ட அவைத்தலைவா் ம.ஜெயச்சந்திரன் தலைமை வகிக்கிறாா். மாவட்ட செயலா் நா.புகழேந்தி, பொருளாளா் இரா.ஜனகராஜ், துணைச் செயலா்கள் மைதிலி ராஜேந்திரன், புஷ்பராஜ்,டி.என்.முருகன் உள்ளிட்டோா் முன்னிலை வகிக்கின்றனா்.
கூட்டத்தில், கட்சியின் துணைப் பொதுச் செயலா் க.பொன்முடி எம்.எல்.ஏ. பங்கேற்று சிறப்புரையாற்றுகிறாா்.
இந்தக் கூட்டத்தில், திமுக தலைவரின், எல்லோரும் நம்முடன் திட்டத்தின் மூலம் இணைய வழியில் கட்சி உறுப்பினா்கள் சோ்த்தல், வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளது என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.