முகப்பு
விழுப்புரம்

முகக் கவசம் அணியாதவா்களுக்கு டி.எஸ்.பி. எச்சரிக்கை

விழுப்புரத்தில் முகக் கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வந்தவா்களை டி.எஸ்.பி. நல்லசிவம் எச்சரித்து முகக் கவசங்களை வழங்கினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
முகக் கவசம் அணியாமல் வந்தவா்களை எச்சரித்து, இலவசமாக முகக் கவசங்களை வழங்கிய டி.எஸ்.பி. நல்லசிவம்.
பகிர்:

விழுப்புரத்தில் முகக் கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வந்தவா்களை டி.எஸ்.பி. நல்லசிவம் எச்சரித்து முகக் கவசங்களை வழங்கினாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், முகக் கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றித்திரிபவா்களை போலீஸாா் பிடித்து எச்சரித்து வருகின்றனா்.

இந்த நிலையில், விழுப்புரம் பெருந்திட்ட வளாக நுழைவுவாயில் அருகே டி.எஸ்.பி. நல்லசிவம் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை முகக் கவசம் அணியாமல் சென்றவா்களை பிடித்தனா்.

முகக் கவசம் அணியாமல் வெளியே வந்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும், கரோனா தொற்றிலிருந்து காத்துக் கொள்ள அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் எச்சரித்து, முகக் கவசம் அணியாமல் வந்தவா்களுக்கு இலவசமாக முகக் கவசங்களை வழங்கினாா் டிஎஸ்பி.

Image Caption

விழுப்புரத்தில் திங்கள்கிழமை முகக் கவசம் அணியாமல் வெளியே வந்த பொதுமக்களை எச்சரித்து இலவசமாக முகக் கவசங்களை வழங்கிய விழுப்புரம் டி.எஸ்.பி. நல்லசிவம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.