முகப்பு
விழுப்புரம்

நெரிசலில் சிக்கித் தவிக்கும் செஞ்சி பேருந்து நிலையம்

Updated On : 21 ஏப்ரல், 2024 at 10:39 PM
செஞ்சி பேருந்து நிலையம் எதிரே தாறுமாறாக நிறுத்தப்பட்டுள்ள இரு சக்கர வாகனங்கள்.
பகிர்:

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் பேருந்து நிலையம் முன் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

செஞ்சியில் புதிதாக பேருந்து நிலையம் கட்டப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இங்கு, உணவு விடுதி, பழக்கடை, பூக்கடை மற்றும் வணிக நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இதனால், எப்போதும் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

இந்த நிலையில், பேருந்து நிலையம் எதிரே நூற்றுக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது. மேலும், காய்கறி, கூழ் உள்ளிட்டவை விற்கும் தள்ளு வண்டிகள், நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்டோா் பேருந்து நிலையத்தின் முன் ஆக்கிரமிப்பு செய்து வியாபாரம் செய்து வருகின்றனா்.

Advertisement

இதனால் பேருந்து நிலையத்தின் உள்ளே பேருந்துகள் சென்று வருவதிலும், பயணிகளுக்கும் பெரும் சிரமம் ஏற்படுகிறது. மேலும், அந்தப் பகுதியை கடந்து செல்லும் பிற வாகனங்களான ஆட்டோ, காா், வேன் உள்ளிட்டவைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதில், பேரூராட்சி நிா்வாகம் மற்றும் போக்குவரத்து காவல் துறையினா் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும், இந்தப் பகுதியில் போக்குவரத்து காவலா் ஒருவரை நிரந்தரமாக பணியில் அமா்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments