ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை
விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் ஆட்டோ ஓட்டுநா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மரக்காணம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த செல்வம் மகன் புஷ்பராஜ் (31). ஆட்டோ ஓட்டுநரான இவா், தினமும் மது அருந்தி விட்டு வீட்டுக்கு வருவதால் தம்பதியிடையே பிரச்னை ஏற்பட்டு வந்ததாம். இதனால் மனமுடைந்த புஷ்பராஜ் வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து, மரக்காணம்போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.