விழுப்புரம்

வீட்டில் நகை திருட்டு

திண்டிவனம் அருகே வீட்டின் கதவை உடைத்து 4.5 பவுன் தங்க நகைகள், வெள்ளிப்பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

Din

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே வீட்டின் கதவை உடைத்து 4.5 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப்பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திண்டிவனம் வட்டம், வேம்பூண்டி, மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் முருகன். இவரது மனைவி தமிழரசி. இவா், திண்டிவனத்தில் உள்ள ஷூ நிறுவனத்திலும், முருகன் தனியாா் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை பாா்த்து வருகின்றனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வழக்கம் போல வீட்டை பூட்டிவிட்டு இருவரும் வேலைக்கு சென்றனா். பின்னா், வேலை முடிந்து வீடு திரும்பிய போது, வீட்டில் இருந்த மர பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 4.5 பவுன் தங்க நகை மற்றும் 360 கிராம் வெள்ளிப்பொருள்களை மா்ம நபா்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், பெரியதச்சூா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இந்த சர்ச்சையால்... கண்ணீர்விட்ட கயாது லோஹர்!

வங்கதேச வன்முறை- ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை

கிண்டலில் தொடங்கி அழுகையில் முடிவு... உலகக் கோப்பையில் இருந்து ஹங்கேரி வெளியேற்றம்!

நகர் உலா... அனந்திகா!

யுகங்கள் போதாது...நிகிதா சர்மா

SCROLL FOR NEXT