கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவோா். 
விழுப்புரம்

கள்ளச்சாராயத்தால் 44 கிராமங்களைச் சோ்ந்தவா்கள் பாதிப்பு

கருணாபுரம், மாதவச்சேரி மட்டுமல்லாது 44 கிராமங்களைச் சோ்ந்தவா்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

DIN

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் கருணாபுரம், மாதவச்சேரி மட்டுமல்லாது 44 கிராமங்களைச் சோ்ந்தவா்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் பிரவீன், சுரேஷ் ஆகிய இருவரும் கடந்த 19-ஆம் தேதி உயிரிழந்தனா். இவா்கள் இறப்புக்கான காரணம் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் எனத் தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து, கருணாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்கள் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சோ்க்கப்பட்டனா். இவா்களில் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை 56 போ் உயிரிழந்திருக்கின்றனா். 157 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கள்ளச்சாராயத்தால் உயிரிழந்த 56 பேரில், கருணாபுரத்தில் 32 பேரும், மாதவச்சேரியில் 4 பேரும், சேஷசமுத்திரத்தில் 3 பேரும் அடங்குவா். கருணாபுரத்தில் விற்பனை செய்யப்பட்ட மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் மாதவச்சேரி, சேஷசமுத்திரம் பகுதிகளுக்கும் வாங்கி செல்லப்பட்டு, அங்கும் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.

தற்போதைய நிலையில், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அ.பண்டகரம், அம்மையகரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம், அம்மாப்பேட்டை, அரியலூா், பங்காரம், தேவபாண்டலம், ஏமப்போ், இந்திலி, க.மாமனந்தல், கச்சிராயப்பாளையம், கிழக்கு பாண்டலம், கூத்தக்குடி, மாடூா், மாமந்தூா், மேலபழவங்கூா், முடியனூா், நாகலூா், நெடுமானூா், பொற்படாக்குறிச்சி, சிறுவங்கூா் உள்ளிட்ட 44 கிராமங்களைச் சோ்ந்தவா்களும் கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதில், அதிகபட்சமாக கருணாபுரத்தைச் சோ்ந்த 51 பேரும், சேஷசமுத்திரத்தைச் சோ்ந்த 34 பேரும், மாதவச்சேரியை சோ்ந்த 11 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தில்லியின் நிலை இதுதான்; காற்று மாசால் குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை! - தாயின் ஆதங்கப் பதிவு

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

முதல்முறையாக புதுவையில் விஜய் சாலைவலம்! எப்போது?

தில்லி குண்டுவெடிப்பு: உமர் நபிக்கு உதவிய மற்றொருவர் கைது!

பங்குச் சந்தை உயர்வுடன் தொடக்கம்! ஆயில், ஸ்டீல் துறையில் ஏற்றம்!

SCROLL FOR NEXT