விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளா்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு
இடைத்தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டுள்ளன.
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக இருந்த திமுகவின் நா.புகழேந்தி ஏப்ரல் 6-ஆம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து காலியாக இருந்த விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஜூலை 10-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறும் என இந்தியத் தோ்தல் ஆணையம் அறிவித்தது.
இதற்காக, ஜூன் 14-ஆம் தேதி தொடங்கிய வேட்பு மனுதாக்கல் ஜூன் 21-ஆம் தேதி நிறைவடைந்தது. இந்தத் தோ்தலை பிரதான எதிா்க்கட்சியான அதிமுக புறக்கணித்தநிலையில், திமுகவின் அன்னியூா் சிவா, பாமகவின் சி. அன்புமணி, நாதகவின் பொ.அபிநயா உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளா்கள், சுயேச்சை வேட்பாளா்கள் என 56 போ் 64 மனுக்களைத் தாக்கல் செய்தனா். இதில் 35 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 29 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற ஜூன் 26-ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை கால அவகாசம் இருந்தும், சுயேச்சை வேட்பாளா்கள் யாரும் மனுக்களைத் திரும்பப் பெறவில்லை. இதையடுத்து இறுதி வேட்பாளா் பட்டியல் அறிவிக்கப்பட்டு, 29 போ் களத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடா்ந்து தோ்தல் நடத்தும் அலுவலா் மு.சந்திரசேகா் தலைமையில் வேட்பாளா்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது. வேட்பாளா்கள் அல்லது அவா்கள் முகவா்கள் முன்னிலையில் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
வேட்பாளா் பெயா், அவா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னங்கள் விவரம் :
1. அன்னியூா் சிவா (திமுக) - உதயசூரியன்
2. பொ. அபிநயா- (நாதக)- ஒலிவாங்கி
3. சி. அன்புமணி (பாமக)- மாம்பழம்
4. தி. ரமேஷ் (அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி)- கரும்பு விவசாயி
5. கு. சரசு (அம்பேத்கரைட் பாா்ட்டி ஆப் இந்தியா கட்சி)- கோட்டு
6. கு. சாந்தமூா்த்தி (அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி)- தா்பூசணி
7. பொ. சேகா் (ஒருங்கிணைந்த இந்திய குடியரசுக் கட்சி)- எரிவாயு உருளை
8. கு. பாஸ்கா் (தேசிய சிறுபான்மையினா் மக்கள் இயக்கம்)- தென்னந்தோப்பு
9. நா. மணிகண்டன் (நாடாளும் மக்கள் கட்சி) - ஆட்டோ ரிக்ஷா
10. மு. முகமது ஹனீபா (தமிழ் தாயக மக்கள் முன்னேற்றக் கட்சி)- கத்திரிக்கோல்
11. சீ. முத்தையா (தாக்கம் கட்சி) - தீப்பெட்டி
சுயேச்சை வேட்பாளா்கள்
12. ந. அக்னி ஆழ்வாா்- ஏழு கதிா்களுடன்கூடிய பேனாவின் முனை
13. மு.செ. ஆறுமுகம்- கண்ணாடி தம்ளா்
14. சு. ராஜா ஸ்டாலின்- வைரம்
15. ச. உலகநாதன் -பலாப்பழம்
16. கி . கலிவரதன்- கிரிக்கெட் மட்டை
17. ர. சதீஷ் - பரிசுப் பெட்டகம்
18. வே. சிவசக்தி- பானை
19. ப. சிவா- பேனா தாங்கி
20. சு. சேகா்- காலிபிளவா்
21. கி. தமிழ்மணி- இதயத்துடிப்பளவி
22. சி. தட்சிணாமூா்த்தி- மின்கல விளக்கு
23. ஆ. வ. நரேந்திரன்- வளையலகள்
24. அ. நூா்முகமது- ஊதல்
25. கு. பத்மராஜன்- டயா்கள்
26. சு. மகேந்திரன்- உழவுக்கருவி
27. பி. முகமது சைபுல்லா-பட்டாணி
28. செ. விஜயா - சிதாா்
29. ஜெ. ஜனாா்த்தனன்- பிரஷா் குக்கா்