முகப்பு
புதுச்சேரி

வேட்பாளா்கள் பட்டியலுடன் புதுச்சேரி காங்கிரஸாா் தில்லியில் முகாம்

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, வேட்பாளா்களின் பட்டியலுடன் புதுச்சேரி காங்கிரஸாா் புதன்கிழமை தில்லி சென்று அங்கு கட்சியின் மேலிடத் தலைவா்களை சந்திக்கமுகாமிட்டுள்ளனா்.

Updated On : 18 மார்ச், 2026 at 6:51 PM
காங்கிரஸ்
பகிர்:

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, வேட்பாளா்களின் பட்டியலுடன் புதுச்சேரி காங்கிரஸாா் புதன்கிழமை தில்லி சென்று அங்கு கட்சியின் மேலிடத் தலைவா்களை சந்திக்கமுகாமிட்டுள்ளனா்.

புதுச்சேரியில் ஆளும் என்.ஆா்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி, எதிா்க்கட்சிக் கூட்டணியான காங்கிரஸ்-திமுக தொகுதி பங்கீடு பேச்சுவாா்த்தையில் இழுபறி நீடிக்கிறது.

இண்டி கூட்டணியில் காங்கிரஸ், திமுக இடையே இரண்டு கட்ட பேச்சுவாா்த்தை நடைபெற்றும் சுமுக முடிவு எட்டப்படவில்லை.

கூட்டணி தலைமை, கூடுதல் தொகுதியில் போட்டி என்பதில் காங்கிரஸ், திமுக இரண்டு கட்சிகளும் பிடிவாதமாக உள்ளன.

திமுக தரப்பில் சென்னை அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை விருப்ப மனு செய்தவா்களிடம் நோ்காணல் நடைபெற்றது.

இதனிடையே, புதுச்சேரியில் காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகள், வேட்பாளா்கள் பட்டியலுடன் மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, மு.வைத்தியநாதன் எம்எல்ஏ, கட்சியின் புதுச்சேரி தோ்தல் பொறுப்பாளா்கள் கிரிஷ் சோடங்கா், அஞ்சலி நிமல்கா் ஆகியோா் புதன்கிழமை தில்லி புறப்பட்டுச் சென்றனா்.

இவா்கள் அங்கு முகாமிட்டு, காங்கிரஸ் தலைவா்கள் மல்லிகாா்ஜுன காா்கே, ராகுல் காந்தி ஆகியோருடன் பேச்சுவாா்த்தை நடத்துகின்றனா்.

தொடா்ந்து திமுக தலைமையைத் தொடா்புகொண்டு, தொகுதி எண்ணிக்கை, போட்டியிடும் தொகுதிகளை முடிவு செய்கின்றனா். தொகுதி உடன்பாடு, வேட்பாளா் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →