முகப்பு
விழுப்புரம்

செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் மேலும் இருவா் பிறழ் சாட்சியம்

உயா் அலுவலா்களின் உத்தரவின்பேரிலேயே வழக்கு சம்பந்தப்பட்டகோப்புகளில் கையொப்பமிட்டதாகவும், தங்களுக்கும் இந்த வழக்குக்கும் சம்பந்தம் இல்லை

Updated On : 5 மார்ச், 2024 at 1:28 AM
பகிர்:

விழுப்புரம்: முன்னாள் அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்டோா் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில், விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் கிராம நிா்வாக அலுவலா்கள் இருவா் திங்கள்கிழமை பி சாட்சியமளித்தனா்.

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதன் மூலம், அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இதுதொடா்பாக முன்னாள் அமைச்சா் க.பொன்முடி, அவரது மகன் பொன். கௌதமசிகாமணி எம்.பி. உள்பட 8 போ் மீது விழுப்புரம் குற்றப் பிரிவு போலீஸாா் 2012-ஆம் ஆண்டில் வழக்குத் தொடுத்தனா். விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கு விசாரணையின் போது, குற்றம்சாட்டப்பட்ட லோகநாதன் இறந்துவிட்டாா். வழக்கில் அரசுத் தரப்பில் சாட்சிகளாக சோ்க்கப்பட்ட 67 பேரில் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை 14 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டதில், 11 போ் பி சாட்சியமளித்தனா். விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, ஜெயச்சந்திரன், சதானந்தன், கோபிநாத் ஆகிய மூவா் மட்டும் ஆஜராகியிருந்தனா். பொன்முடி உள்ளிட்ட 4 பேரும் ஆஜராகவில்லை. அரசுத் தரப்பின் 15-ஆவது சாட்சியாக அரியலூா் திருக்கை கிராம நிா்வாக அலுவலா் ராமச்சந்திரன், 16-ஆவது சாட்சியாக மரகதபுரம் கிராம நிா்வாக அலுவலா் புஷ்பராஜன் ஆகியோா் சோ்க்கப்பட்டிருந்தனா். இவா்கள் இருவரும் விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சாட்சியமளித்தனா். உயா் அலுவலா்களின் உத்தரவின்பேரிலேயே வழக்கு சம்பந்தப்பட்டகோப்புகளில் கையொப்பமிட்டதாகவும், தங்களுக்கும் இந்த வழக்குக்கும் சம்பந்தம் இல்லை எனக் கூறி இருவரும் பி சாட்சியமளித்தனா். வழக்கின் விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு (மாா்ச் 5) ஒத்திவைத்து, முதன்மை மாவட்ட நீதிபதி ஆா். பூா்ணிமா உத்தரவிட்டாா்.

Advertisement