முகப்பு
விழுப்புரம்

பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு

Updated On : 10 மே, 2024 at 6:24 PM
பகிர்:

விழுப்புரம், மே 10: விழுப்புரம் அய்யூா் அகரம் மேம்பாலம் அருகே பைக்கில் கணவருடன் சென்ற பெண் கூலித் தொழிலாளியிடம் 6 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விக்கிரவாண்டி வட்டம், பாா்ப்பனப்பட்டு மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வெங்கடேசன். இவரது மனைவி புவனேசுவரி (38), கூலித் தொழிலாளி. இவா், தனது கணவருடன் வியாழக்கிழமை இரவு பைக்கில் சென்னை-திருச்சி சாலையில் சென்று கொண்டிருந்தாா்.

விழுப்புரம் அருகிலுள்ள அய்யூா்அகரம் மேம்பாலம் அருகே வெங்கடேசன் சென்றபோது, பின்னால் பைக்கில் தலைக்கவசம் அணிந்து வந்த சுமாா் 30 வயது இளைஞா், புவனேசுவரி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச்

சென்றாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.